பூந்தமல்லி, திருவள்ளூர் மத்திய மாவட்ட அ.தி.மு.க.வின் கள் ஆய்வு கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயகுமார், சி.வி.சண்முகம் , பா.பென்ஜமின், ஜெயபால் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளரும் , முன்னாள் முதலமைச்சரும், பிரதான சட்டமன்ற எதிர் கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வின் வளர்ச்சி பணிகள் குறித்து கள ஆய்வு செய்ய ஆணையிட்டார்.
அதன்படி , திருவள்ளூர் மத்திய மாவட்டத்தில் உள்ள மதுரவாயல், பூந்தமல்லி சட்டமன்றத் தொகுதிகள் உள்ள அ.தி.மு.க.வின் வளர்ச்சிப் பணிகள் குறித்து கள ஆய்வுக் கூட்டம் மதுரவாயல் அடுத்த அடையாளம்பட்டு பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த கள ஆய்வுக் கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மத்திய மாவட்டச் செயலாளருமான பா.பென்ஜமின் தலைமை தாங்கினார்.
முன்னாள் எம்.பி.நேமம் எஸ்.ஜெகநாதன் , முன்னாள் எம்.எல்.ஏ. இரா.மணிமாறன் , பூந்தமல்லி நகர செயலாளர் கே.எஸ்.ரவிசந்திரன் , மதுரவாயல் பகுதி செயலாளர்கள் ஏ.தேவதாஸ் , எம்.என்.இம்மானுவேல் , இ.கந்தன் , கே.தாமோதரன் , ஒன்றியச் செயலாளர்கள் ராஜா என்கிற பேரழகன், கே.ஜி.டி.கவுதமன் , புட்ளூர் சந்திரசேகரன், செவ்வாப்பேட்டை பூங்காவனம் , வடகரை மகேந்திரன், திருமழிசை பேரூர் செயலாளர் டி.எம்.ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட அவைத் தலைவர் தி.ப.கண்ணன் , மாநில இலக்கிய அணி துணைச் செயலாளர் இ.சி.சேகர் , சென்னை மாநகராட்சி எதிர் கட்சி துணைத் தலைவரும் , 145 வது வார்டு மாமன்ற உறுப்பினருமான நெற்குன்றம் டி.சத்தியநாதன், மாவட்ட துணைச் செயலாளர் கா.சு.ஜனார்த்தனம், மாவட்ட பேரவைச் செயலாளர் க.வைதியநாதன் , மாணவர் அணி செயலாளர் கு.சதீஷ்குமார் , எம்.பி.தென்றல் குமார் ஆகியோர் வரவேற்றனர்.
இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயகுமார் , சி.வி.சண்முகம் , ஜெயபால் ஆகியோர் கலந்து கொண்டு ஒவ்வொரு ஒன்றியச் செயலாளர்கள் , ஒவ்வொரு நகர செயலாளர்கள், பகுதி செயலாளர்களிடம் கட்சி வளர்ச்சிப் பணிகள், கட்சியில் ஒற்றுமை, புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் , 18 வயது இளைஞர்களை கட்சியில் சேர்த்தல் உள்ளிட்டவைக் குறித்து பேசினார்கள்.
இக்கூட்டத்தில் வர்த்தக அணி மாவட்ட செயலாளர் இன்ஜினியர் ஜெ.துரைராஜ் , பேரவை மாவட்டத் தலைவர் ஆலப்பாக்கம் லயன் இ.அரசு , வழக்கறிஞர் பிரிவு து.சூரியநாராயணன் , அந்தமான் கே.முருகன் , காட்டுப்பாக்கம் ஜி.திருநாவுக்கரசு , கே.ராஜகோபால் , பூவை.எம்.ஞானம் , டாக்டர் எம்.ஜி.பிரேம்குமார் , எஸ்.கோபிநாத் , சிறுபான்மை பிரிவு செயலாளர் சி.சார்லஸ் , மீனவர் அணி செயலாளர் கார்ல் மார்க்ஸ், எம்.எஸ்.பச்சையப்பன் , எம்.ஆர்.முனியன் , ஏ.பாரத் , எம்.எம்.மூர்த்தி , மேட்டுக் குப்பம் ஏ.தாமோதரன் , எம்.பாரதி , எம்.மூர்த்தி, வி.மகேந்திரன் , ராஜ்குமார் பச்சையப்பன், வளசை வி.காசி, கே.பி.வேணுகோபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நியூஸ் தமிழ் செய்திகளுக்காக:
தலைமை நிருபர். B.செல்வாம்பிகை.