ஆவடி அடுத்த வில்லிவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட மோரை கிராமத்தில் கிராம சபைக் கூட்டம் செயல் அலுவலர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் R.திவாகரன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். இக்கூட்டத்தில் கிராம பொதுமக்கள் மற்றும்
கிராம சபா உறுப்பினர்கள்/மகளிர் குழு உறுப்பினர்கள் என திரளாக கலந்து கொண்டு பல்வேறு விவாதங்களுடன் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள்
01. கிராம ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களை சிறப்பித்தல் குறித்து விவாதித்தல்
02. கிராம ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்களை கெளரவித்தல் குறித்து விவாதித்தல்
03. வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல்.
04. தூய்மை பாரத இயக்க(ஊரகம்) திட்டம் குறித்து விவாதித்தல்.
05. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் குறித்து விவாதித்தல்.
06. ஜல் ஜீவன் இயக்கம் குறித்து விவாதித்தல்.
07. தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் மேம்பாட்டு திட்டம் குறித்து விவாதித்தல்.
08. கூட்டாண்மை மற்றும் ஒழுங்கிணைப்பு பிரிவு குறித்து விவாதித்தல்.
தண்ணீரை வீணாக்காதீர்.
மின்சாரத்தை சேமியுங்கள்
போன்ற தீர்மானங்களை இந்த கிராம சபை கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன இந்த கிராம சபை கூட்டத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
நியூஸ் தமிழ்
செய்திகளுக்காக:
தலைமை நிருபர்
B.செல்வாம்பிகை