திருவள்ளூர்
ஆவடி CRPF வளாகம்..
*நாடு முழுவதும் 45 இடங்களில் நடைபெறும்.ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் 71000 பேருக்கு மத்திய அரசு பணி நியமன கடிதங்கள்
*ஆவடியில் உள்ள CRPF குழு மையத்த்தில் நடைபெறும் “ரோஜ்கர் மேளா 14 வது” நிகழ்வில், மத்திய இணை அமைச்சர் சந்திரசேகர் பெம்மாசானி – தகவல் தொடர்பு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் நேரில் வந்து419 புதிய பணியாளர்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கான ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது.நாடு முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பணியாளர்கள், உள்துறை அமைச்சகம், தபால் துறை, உயர் கல்வித் துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், நிதிச் சேவைகள் துறை உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்கள்/துறைகளில் இன்று ஆனையை பெற்று பணியில் சேர்வதற்கான ஆணைகளை பெற்றுக் கொண்டனர்.
நியூஸ் தமிழ் செய்திகளுக்காக:
தலைமை நிருபர்,
B.செல்வாம்பிகை.