திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம். நெமிலிச்சேரி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கு.தமிழ்ச்செல்வி தலைமையில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் கிராம ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களை கெளருவித்தல்.சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மகளிர் சுய உதவி குழுவினரை கெளருவித்தல். தூய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டம் குறித்து விவாதித்தல்.மற்றும் ஜல்ஜீவன் இயக்கம்.
தீன் தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் மேம்பாட்டுத் திட்டம். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
பூந்தமல்லி ஊராட்சி ஒன்றிய
பணி மேற்பார்வையாளர் அருணாச்சலம் முன்னிலை வகித்தார் கூட்டத்தில் துணை தலைவர் வாசுகி எட்வின்.ஊராட்சி மன்ற உறுப்பினர்கள். மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். இதேபோன்று வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம். மோரை ஊராட்சியில் தலைவர் திவாகரன் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து விவாதித்தல் மற்றும் கிராம ஊராட்சியில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களை சிறப்பித்தல் மற்றும் மகளிர் சுயஉதவி
குழுவினர்கள். ஜல் ஜீவன் இயக்கம். கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு. மற்றும் பல திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
துணை தலைவர் கார்த்திக் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இதேபோன்று வெள்ளானூர் ஊராட்சியில்தலைவர் பிரபாகரன் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் குறித்து விவாதித்தல் மற்றும் ஜல் ஜீவன் இயக்கம் குறித்தும் மற மற்றும் பல்வேறு செயல்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில்
துணை தலைவர் வெங்கட் . வார்டு உறுப்பின்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
நியூஸ் தமிழ் செய்திகளுக்காக:
தலைமை நிருபர்,
B.செல்வாம்பிகை