ஆவடி காவல் ஆணையரக‌ பகுதிக்கு கூடுதலாக 433 காவலர்கள் விரைவில் நியமனம் – டிஜிபி சங்கர் ஜிவால் தகவல் 

ஆவடி , ஜன, 15 – ஆவடி காவல் ஆணையரக பகுதிக்கு  கூடுதலாக 433 காவலர்கள் விரைவில் நியமிக்கப்படவுள்ளனர் என காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால்  தெரிவித்தார்.

ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் பொங்கல் விழா திருமுல்லைவாயல் காவலர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதற்கு தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) சங்கர் ஜிவால் தலைமை வகித்தார். ஆவடி காவல் ஆணையர் கி.சங்கர் முன்னிலை வகித்தார். விழாவில் காவல் அதிகாரிகள், காவலர்கள் குடும்பத்துடன் வருகை தந்து பொங்கலிட்டு வழிபாடு செய்தனர். விழாவில் காவல்துறை இயக்குநர் சங்கர் ஜிவால் பேசியது, ஆவடி காவல் ஆணையரகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இங்கு கூடுதலாக 433 காவலர்கள் விரைவில் நியமிக்கப்படவுள்ளனர். காவலர்கள் நலன் கருதி தற்போது வழங்கப்பட்டு வரும் சேமநல நிதியானது ரூ.8 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது என்றார்.

பின்னர் , அவர் சிறப்பாக செயல்பட்ட ஆவடி காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி உள்பட 10 காவல்துறை அதிகாரிகள், காவலர்களுக்கு சான்றிதழ்கள், ரொக்கப் பரிசுகளை வழங்கி கௌரவித்தார். மேலும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கினார்.

விழாவில்  காவல் கூடுதல் ஆணையர், துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

ஆவடி காவல் ஆணையரகத்தில் சிறப்பாக பணியாற்றிய ஆவடி காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்திக்கு பாராட்டு சான்றிதழ் ரொக்கப் பரிசு ஆகியவற்றை காவல் துறை தலைவர் சங்கர் ஜிவால் வழங்கினார்.உடன் காவல் ஆணையர் கி.சங்கர் உள்ளார்.

நியூஸ் தமிழ் செய்திகளுக்காக:

தலைமை நிருபர் B.செல்வாம்பிகை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *