- முகப்பேர் மார் கிரிகோரியஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 24 வது பட்டமளிப்பு விழா நிகழ்வு!
கீழ்பாக்கம்:
சென்னை முகப்பேர் மேற்கில் அமைந்துள்ள மார் கிரிகோரியஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 24 வது பட்டமளிப்பு விழா கீழ்ப்பாக்கத்தில் உள்ள சி.எஸ்.ஐ. லைட் ஆடிடோரியத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வின் தொடக்கமாக இறைவாழ்த்துப் பாடப்பட்டது.
- மேலும் இப்பட்டமளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாகப் பேராயர், அருட்தந்தை சாஜி மேத்யூஸ் வாழயில், விகார் ஜெனரல் கார்ப்பரேட் மேனேஜர், கல்லூரி முன்னேற்றக்குழுவின் புலமுதன்மையர் (பொறுப்பு) மற்றும் சென்னைப்பல்கலைக்கழகம், பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் துறையின் தலைவர் முனைவர் உத்தம்குமார் ஜமதக்கனி, கல்லூரி செயலர்
அருட்தந்தை மேத்யூ பள்ளிக்குன்னல்,
மற்றும் கல்லூரி முதல்வர் ஸ்ரீகாந்த் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மேலும் சிறப்பு அழைப்பாளர்கள் மாணவ- மாணவியர்களுக்குப் பட்டங்களை வழங்கி கௌரவித்தனர்.
சுழற்சி I மற்றும் சுழற்சி II இல் 698 இளங்கலை மாணவ – மாணவியர்களும்,சுழற்சி I இல் 67 முதுகலை மாணவ – மாணவியர்களும் பட்டங்களைப் பெற்றனர்.
இவ்விரு சிறப்பு அழைப்பாளர்களும் மாணவர்கள் வருங்கால இந்தியாவின் ஒளிவிளக்கு
களாகத்திகழ வேண்டும் என்று அறிவுரை கூறினர்.
இறுதியாக நாட்டுப்பண் பாடப்பட்டது.
நியூஸ் தமிழ் செய்திகளுக்காக:
தலைமை நிருபர்
B.செல்வாம்பிகை.