ராமாபுரம் 155 வது வார்டில் உள்ள அம்மா உணவகத்தில் கடந்த 8 நாட்களாக சமையல் செய்யவில்லை பொதுமக்கள் அவதி

ராமாபுரம் 155 வது வார்டில் உள்ள அம்மா உணவகத்தில் கடந்த 8 நாட்களாக சமையல் செய்யவில்லை
பொதுமக்கள் அவதி

Oplus_131072

ராமா பாரம் , நவ, 19 – ராமாபுரம் 155 வது வார்டில் உள்ள அம்மா உணவகத்தில் கடந்த 8 நாட்களாக உணவு சமைக்கவில்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். மாறாக வேறு இடத்தில் உள்ள அம்மா உணவகத்தில் இருந்து குறைந்த அளவில் உணவு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை மாநகராட்சி, வளசரவாக்கம் மண்டலம் 11 , ராமாபுரம் 155 வது வார்டில் பஜனைகள் கோவில் தெருவில் அம்மா உணவகம் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது.
இந்த உணவகத்தில் காலையில் 1200 இட்லியும் , மதியம் 600 பேருக்கு சாம்பார், புளியோதரை, தயிர் சாதம் விற்பனை செய்யப்படும்.இதே போல இரவு நேரத்தில் 300 க்ற்கும் மேற்பட்டோர் சப்பாத்தி சாப்பிட்டு வந்தனர்.

இங்கு 10 பெண்கள் சமையல் வேலையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் இவர்களில் 8 பேர் மீது பல்வேறு குற்றச் சாட்டு அடிப்படையில் வேலையில் இருந்து நிறுத்தப்பட்டனர். இதற்கு பதில் புதியதாக 8 பேர் நியமனம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் கடந்த வாரம் பழைய ஊழியர் ஒருவரும் புகார் அடிப்படையில் வேலையில் இருந்து நின்று விட்டார்.இதனால் பழைய வேலையாள் குழுத் தலைவி மட்டும் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த செவ்வாய் கிழமை மையில் இருந்து அம்மா உணவகம் திறக்கப்பட்டு இருந்தாலும் சமையல் செய்யப்படுவது இல்லை. கடந்த 8 நாட்களாக சமையல் செய்யப்படாமல் உள்ளது.மாறாக ராமாபுரம் பாரதி சாலையில் உள்ள அம்மா உணவகத்தில் இருந்து காலை சிற்றுண்டி மற்றும் மதியம் சாதங்கள் 200 பேருக்கும், கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது .இதே போல இரவு சப்பாத்தி ராமாபுரம் திருமலை நகரில் இருந்து கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது.குறைந்த அளவில் உணவு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் பலர் உணவு கிடைக்காமல் திரும்பி செல்கின்றனர்.
இதுபற்றி சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் அம்மா உணவகம் தொடர்ந்து சிறப்பாக நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நியூஸ் தமிழ் செய்திகளுக்காக:

தலைமை நிருபர் : B.செல்வாம்பிகை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *