திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் வி.அலெக்சாண்டர் சூளுரை கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சர் ஆவது காலத்தின் கட்டாயம்
கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் நீடுழி வாழ வேண்டி திருவேற்காடு ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தில் கோபூஜை அன்னதானம் நடைபெற்றது.

கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நீடூழி வாழ வேண்டியும் தமிழகத்தின் முதலமைச்சராக வேண்டியும் திருவேற்காடு ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோவிலில் கோ பூஜை அபிஷேகம் அன்னதானம் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் பேசிய திருவள்ளுவர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் வி அலெக்ஸாண்டர் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராவது பாலத்தின் கட்டாயம் என்று சூளுரைத்தார்.
கழகப் பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட கழகச் செயலாளர் வி.அலெக் சாண்டர் தலைமையில்


நகரக் கழகச் செயலாளர் எஸ்.எஸ் எஸ்.குமார் ஏற்பாட்டில் 2000 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நமது தேசத்திற்காக பாடுபடும் இந்திய ராணுவ வீரர்களுக்காக கூட்டுப் பிரார்த்தனை உள்ளிட்டவை நடைபெற்றது.
நியூஸ் தமிழ் செய்திகளுக்காக:
தலைமை நிருபர்
B.செல்வாம்பிகை.