பூந்தமல்லி, ராமாபுரம் அம்மா உணவகம் சமையல் கூடம் கடந்த 8 நாட்களாக மூடப்பட்டது.வேறு அம்மா உணவகத்தில் இருந்து உணவு கொண்டு வந்து விற்பனை செய்ததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.
சென்னை மாநகராட்சி, வளசரவாக்கம் மண்டலம் 11 , வார்டு எண் 155 ராமாபுரம் பஜனைகள் கோவில் தெருவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது.
இந்த உணவகத்தில் உணவு தரமாக உள்ளதால் காலையில் 1000 இட்லி விற்பனையானது .இதே போல மதியம் சாம்பார் சாதம், தயிர் சாதம் 300 க்கு மேற்பட்டவர்கள் சாப்பிட்டு வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 12 ந்தேதியில் இருந்து நேற்று வரை 8 நாட்களாக அம்மா உணவகம் திறக்கப்பட்டு இருந்தது. ஆனால் சமையல் கூடம் செயல்படவில்லை.மாறாக ராமாபுரம் பாரதி சாலையில் உள்ள அம்மா உணவகத்தில் இருந்து காலையில் இட்லியும், மதியம் சாம்பார், தயிர் சாதம் கொண்டு பஜனைகள் கோவில் அம்மா உணவகத்தில் விற்பனை செய்யப்பட்டது. இதே போல , இரவு சப்பாத்தி ராமாபுரம், திருமலை நகரில் உள்ள அம்மா உணவகத்தில் இருந்து கொண்டு வந்து , பஜனை கோவில் தெருவில் உள்ள அம்மா உணவகத்தில் விற்க்குப்பட்டது.
இதனால் பொதுமக்கள் சுடசுட உணவு கிடைக்காமல் அவதிப்பட்டனர். உணவுப் பொருட்கள் இருந்தும் கடந்த 8 நாட்களாக அம்மா உணவகம் சமையல் கூடம் செயல்படாமல் , மாற்று இடத்தில் இருந்து உணவு கொண்டு விற்பனை செய்தது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து வளசரவாக்கம் மண்டல நல அலுவலரிடம் கேட்டப் போது , கடந்த 8 நாட்களாக அம்மா உணவகம் சமையல் கூடம் செயல்படாமல் இருந்தது உண்மை தான்.சில காரணங்களால் சமையல் கூடம் செயல்படவில்லை.மீண்டும் வழக்கம் போல் சமையல் கூடத்தில் சமையல் செய்யப்படும் எனக் கூறினார்.
நியூஸ் தமிழ் செய்திகளுக்காக:
தலைமை நிருபர், B.செல்வாம்பிகை