பூந்தமல்லி நகர அ.தி.மு.க.சார்பில் எம்.ஜி.ஆரின் 108 வது பிறந்த நாள் விழாவும், 1000 பேருக்கு புடவைகள் வழங்கும் விழாவும் குமணன் சாவடியில் நேற்று நடைபெற்றது.

தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது
முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின் பேச்சு

தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என்று முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின் பேசினார்.

பூந்தமல்லி நகர அ.தி.மு.க.சார்பில் எம்.ஜி.ஆரின் 108 வது பிறந்த நாள் விழாவும், 1000 பேருக்கு புடவைகள் வழங்கும் விழாவும் குமணன் சாவடியில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு பூந்தமல்லி நகர செயலாளர் கே.எஸ்.ரவிசந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி.நேமம் எஸ்.ஜெகநாதன் , முன்னாள் எம்.எல்.ஏ. இரா.மணிமாறன் , மாவட்ட பொருளாளர் கா.சு.ஜனார்த்தனன் , மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் சி.வை.ஜா. சல்மான் ஜாவித், மாவட்ட மாணவர் அணி செயலாளர் கே.சதீஷ்குமார் குப்புரத்தினம் , மாவட்ட இலக்கிய அணி செயலாளர் எஸ்.கோபிநாத் , மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அந்தமான் கே.முருகன் ,  மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற தலைவர் பூவை.எம்.ஞானம்,  மாவட்ட சிறுபான்மை செயலாளர் சி.சார்லஸ் , மாவட்ட அம்மா பேரவை செயலாளர்‌ க.வைதியநாதன் ,  பூந்தமல்லி ஒன்றிய செயலாளர் கே.ஜி.டி.கவுதமன் , பூவை.டாக்டர்.எம்.ஜி.பிரேம்குமார், ஐ.டி.விங் செயலாளர் அபிஷேக் ஜேக்கப் மற்றும் பலர் முன்னிலை வகித்தனர்.
பி.கே.மணி, பூவை.கே.நடராஜன், முகுந்தன் , பாபு ஆகியோர் வரவேற்றனர்.
இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மத்திய மாவட்டச் செயலாளருமான பா.பென்ஜமின் கலந்து கொண்டு பேசியதாவது:-

அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆணைப்படி  முன்னாள் முதலமைச்சர்  எம்.ஜி.ஆரின் 108 வது பிறந்த நாள் விழாவும், நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் ஒரு மாநாடு போல் நடைபெற்று வருகிறது. அ.தி.மு.க.வை.உருவாக்கிய எம்.ஜி.ஆர். முதலமைச்சராக பதவி வகித்து , ஏழை எளிய மக்களின் வளர்ச்சிக்கு வழி வகுத்தார். இவரது மறைவிற்கு உருவாக்கிய எம்.ஜி.ஆர். முதலமைச்சராக பதவி வகித்து , ஏழை எளிய மக்களின் வளர்ச்சிக்கு வழி வகுத்தார். இவரது மறைவிற்கு பிறகு ஜெயலலிதா முதலமைச்சராக பதவி வகித்து, எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தினார்.இவரது மறைவிற்கு பிறகு எடப்பாடி கே.பழனிசாமி முதலமைச்சராக பதவி ஏற்று அம்மா கிளினிக் , உள்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தினார்.

ஆனால், இன்றைக்கு தமிழ் நாட்டில் நடைபெறும் தி.மு.க.ஆட்சியில் மக்களுக்கான எந்த திட்டமும் இல்லை. அ.தி.மு.க.அரசு செயல்படுத்திய திருமண உதவி திட்டம், மகளிருக்கு ஸ்கூட்டர், மாணவர்களுக்கு லேப் டாப் உள்ளிட்ட திட்டங்களை நிறுத்தி விட்டனர்.

பால் விலை உயர்வு, மின் கட்டணம் உயர்வு, பத்திரப் பதிவு கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு, என மக்கள் மீது வரிச் சுமையை சுமத்தி விட்டனர். அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிகளுக்கு பாலியல் வன் கொடுமை, கஞ்சா புழுக்கம், ரவுடிகள் அட்டகாசம், தினமும் கொலை, கொள்ளை நடைபெறுகிறது.சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு விட்டது.மக்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை.எப்போது இந்த ஆட்சி முடிவுக்கு வரும் என்று மக்கள் ஏங்கி வருகின்றனர் .அ.தி.மு.க.ஆட்சி எப்போது வரும் என்று மக்கள் ஆர்வமுடன் இருக்கிறார்கள்.இதனால் எப்போது தேர்தல் நடந்தாலும், மீண்டும் அ.தி.மு.க.ஆட்சி ஏற்படுவது உறுதி.எடப்பாடி பழனி சாமி முதலமைச்சர் ஆவது உறுதி.

இவ்வாறு முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமான பா.பென்ஜமின் பேசினார்.
பின்னர் 1000 பெண்களுக்கு புடவைகள், அறுவை சிற்றுண்டி வழங்கப்பட்டது.

பூந்தமல்லி குமணன் சாவடியில் நடைபெற்ற எம்.ஜி.ஆரின் 108 வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமான பா.பென்ஜமின் பேசிய போது எடுத்த படம்.உடன் நகர செயலாளர் கே.எஸ்.

 

நியூஸ் தமிழ் செய்திகளுக்காக:

தலைமை நிருபர்

B.செல்வாம்பிகை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *